Friday 30 December 2011

நெஞ்சம் மறப்பதில்லை....

தங்களின் சாதனைகளாலும், ஆளுமை திறனாலும், கொள்கையாலும், அறிவாலும் மக்களை கவர்ந்தவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கின்றனர். சிலர் அறிவு ஜீவிகளாகவும், சிலர் தலைவர்களாகவும் இருந்துள்ளனர். சிலரிடம் இருந்து நாம் நன்மை பயக்கும் விடயங்களை (விஷயங்களை......தூய தமிழ் வார்த்தை உபயம் - கலசம் வானொலி) கற்றுள்ளோம். சிலரை பார்த்து நாம் எவ்வாறு இருக்க கூடாது என தெரிந்து உள்ளோம். சிலரை பார்த்து வணங்கியும் உள்ளோம்.

அவர்களுள் சிலர் நம் மனம் கவர்ந்த கதா நாயகர்களாகவும் (Heros) மற்ற சிலர் எதிர் மறை கதா நாயகர்களாகவும் (Anti-Heros) இருந்துள்ளனர். அப்படி பட்ட அந்த ஒரு சிலர் இன்று நம்மோடு இல்லை. 2011-ஐ போகிற போக்கில் நாம் வழி அனுப்பும் பொழுது இவர்களும் நம்மிடம் இருந்து விடை பெற்றவர்கள். அவர்களை சற்றேனும் நினைத்துப் பார்க்க இந்த வலைப் பதிவு.

நன்றி.

                
                 

Thursday 22 December 2011

writersujatha.com

 
சுஜாதா என்கிற புனை பெயர் கொண்ட அமரர் திரு.ரங்கராஜன் அவர்கள் எழுத்து உலகின் ஜாம்பவானாக திகழ்ந்தார் என்று கூறினால் அது மிகை ஆகாது. எனது ஊரில் பிறந்தவர் என்கிற காரணத்திற்காக நான் இதை தெரிவிக்கிறேன் என்று நீங்கள் நினைத்தாலும் நான் அதற்கு பெருமை கொள்கிறேன். 

அப்பேற்பட்ட மாமனிதரின் படைப்புகள் இன்றைய இளைய தலைமுறைக்கு, இப்பொழுது எளிதில் கிடைக்க வழி வகைவகை செய்துள்ளார்கள். இதை ஒரு தனிப்பட்ட முயற்சியாக செய்தவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.

அவரது மனைவி திருமதி.சுஜாதா அவர்களை உரிமையாளராக கொண்டு ஒரு அதிகாரபூர்வ இணையத்தளம் (Official Website) உருவாக்கப்பட்டுள்ளது.  அந்த இணையத்தளம்


இந்த இணையத்தளத்தில், எனக்கு தெரிந்து  அவரின் அனைத்து படைப்புகளும் மின்-புத்தகங்களாக (e-books) ஆகா பதிவேற்றம் (upload) செய்துள்ளார்கள். அவை அனைத்தும் 3 முதல் 5 அமெரிக்க டாலர்கள் (3 to 5 USD) விலைக்கு கிடைக்கிறது. அவரின் படைப்புகளால் ஏற்படும் திருப்தி மற்றும் அறிவை கணக்கிடுகையில் இந்த விலை என்னை பொருத்த வரையில் ஒன்றும் இல்லை என்றே கூறுவேன். இதில் உபயோகம் உள்ளது என்று நினைப்பவர்கள், நீங்கள் விரும்பும் புத்தகத்தை e-commerce என்கிற வலை தொடர்பில் (link) சென்று கட்டணம் செலுத்தி பதிவு இறக்கம் (download) செய்துகொள்ளுங்கள்.

எனது இந்த பதிவை அந்த மாமேதைக்கு சமர்ப்பிக்கிறேன்.

குறிப்பு:
இந்த வலைத்தள ஆசிரியர் /  உரிமையாளர், எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் மீது கொண்ட அபிமானத்தின் வெளிப்பாடாக இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவிற்கும் / வலைத்தள ஆசிரியர் /  உரிமையாளருக்கும் , http://www.writersujatha.com உரிமையாளர் / நிர்வாகிக்கும்  (Admin) எந்த சம்பந்தமோ / தொடர்போ இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

பூண்டு....மருத்துவ குணங்கள் (கலசம் ரேடியோ பிட்ஸ்)

வழக்கமா நான் Office போகும்போதும் சரி, சாயங்காலம் வீட்டுக்கு வரும் போதும் என்னுடைய  Mobile Phoneல் Radio கேட்பது வழக்கம். அதுவும் என்னுடைய 3G Nokia Smart Phoneல் Internet Radioக்கள் புதிய Software updateல் கிடைச்சது எனக்கு ஒரு அதிர்ஷ்டம் அடிச்ச மாதிரி இருக்கு. அப்படி Radio கேட்கும் பொது என்னோட முதல் choice கலசம் radio தான். அப்படி இன்னைக்கு கேட்கும் போது "பூண்டு" பத்தின சில Medical tips கெடச்சுது. எதுக்கு use பண்றோம் அப்படினே தெரியாம நம்ம தமிழ்நாட்டு சமையலில் பூண்டு-ஐ use பண்றோம். சாப்பிடுறோம். சில நேரம் வாய் smell அடிக்கும் அப்படின்னு சாப்பிடாம இருக்கோம். அந்த ரேடியோல சொன்ன சில விஷயங்கள் உங்க தேவைக்கு......

1) ரத்தத்தை (Blood) சுத்தபடுத்த பூண்டு ரொம்ப உதவுதாம். அதில் இருக்க கிருமிகளை பூண்டு அழிக்குதாம்.

2) Liverக்கு ரொம்ப நல்லதாம்.

3) பூண்டு-ஐ எப்படி நம்ம உடம்புல correctஆ use பண்ணனும்னா, பசும் பால் நல்லா கொதிக்கும் போது ரெண்டு பல் பூண்டை தட்டி பாலில் போட்டு, பாத்திரத்தை தட்டு போட்டு நல்லா கொதிக்க வெக்கனுமாம் . நம்ம குழம்புல இருக்க பூண்டு-ஐ விட இதுல effect இன்னும் ஜாஸ்தியா இருக்குமாம்.

4) அப்படி இல்லன்னா தேன்-ல பூண்டு-ஐ மேல சொன்னபடி தட்டி போட்டு சாப்பிடனுமாம்.

5) இது எதுவுமே புடிக்காதவங்க, பூண்டு ரசம் வெச்சி சாபிடலாம் அப்படின்னு சொல்றாங்க. அதுலயும் பூண்டு-ஐ நல்ல தட்டி போடணுமாம்.

6) இப்படி சேர்த்துகுரவங்களுக்கு மூட்டு, எலும்பு பிரச்சனை எல்லாம் வயசான காலத்துல வராது அப்படின்னு வேற சொல்றாங்க.

7) நீங்க சரக்கை (சரக்கு அப்படின்னா என்னன்னு தெரியாத பச்ச பிள்ளைங்களுக்கு Englishல Liquorன்னு சொல்லுவாங்க) வேணும்னா Rawவா அடிச்சிருக்கலாம். ஆனா பூண்டு-ஐ Rawவா சாப்பிட்டா சில பேருக்கு acidity மாதிரி வரலாம். வாய் புண்ணாக போக கூட வாய்ப்பு இருக்கு.

இதையே நான் wikipediaவில் தேடும்போது உண்மைஅப்படின்னு புரிஞ்சது. நீங்களும் தெரிஞ்சுக்கனும்னா http://en.wikipedia.org/wiki/Garlic அப்படிங்கிற linkல் படிச்சுகோங்க.

குறிப்பு:
இந்த பதிவு (Post) வாசகர்களின் நன்மை கருதி வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் / வலைதள உரிமையாளரின்  கருத்தை வாசகர்களிடம் திணிப்பது நோக்கம் அல்ல. இந்த மருத்துவ குறிப்பை பின்பற்றுவது வாசகர்களின் சுய விருப்பு வெறுப்பை பொறுத்தே ஆகும். உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.

Monday 19 December 2011

நீயும் நானுமா? சசி...நீயும் நானுமா?



மேல்லோகத்தில் பார்வதி சிவனிடம் கேட்கிறாள்:

பார்வதி: பிரபோ, பூலோகத்தில் இன்று என் நிறைய பேர் மொட்டை அடித்து திருவிழா போல கொண்டாடுகிறார்கள்?

சிவன்: அவர்கள் அ.தி.மு.க கட்சியின் உண்மை விசுவாசிகள். எதற்கு அப்படி கொண்டாடுகிறார்கள் என்று கூறுகிறேன் கேள்.......

அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா திடீர் நீக்கம் - போயஸ் தோட்டத்தில் இருந்தும் வெளியேற்றம்

தனது நீண்ட கால தோழி மற்றும் அவர்கள் சொந்தங்களையும் அ.தி.மு.க.விலிருந்து நீக்கியுள்ளார் ஜெ. ரொம்ப காலமாகவே அவர்கள் நட்பு, மக்கள் மட்டும் அல்ல அவர்கள் கட்சி விசுவாசிகளுக்குமே ஒரு புரியாத புதிராக இருந்து வந்துள்ளது. கட்சி மற்றும் ஆட்சியிலும் அவர்களின் ஆதிக்கம் இல்லாத இடமே இல்லை என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு அவர்கள் தான் அ.தி.மு.க என்கிற பிம்பத்தை உருவாக்கியதாக அக்கட்சியின் விசுவாசிகள் நம்பினார்கள். இதனால் எம்.ஜி.அர் அவர்களின் உண்மை விசுவாசிகளுக்கு கட்சியில் இடம் இல்லாமல் போனது. இதனை தொண்டர்கள் எத்தனையோ முறை ஜெ.விடம் சொல்ல நினைத்து முடியாமல் போனது. இன்றைக்கு வெளியேற்றப்பட்டவர்கள் ஒரு Windows Firewall போல செயல்பட்டு அடிமட்டத்தில் இருந்து வரும் தகவல்களை ஜெ.விடம் முறையாக போய் சேராதபடி பார்த்துகொண்டவர்கள். இதனை அரசால புரசலாக தெரிந்து கொண்ட ஜெ. இனியும் சும்மா இருந்தால் நல்லதல்ல என களத்தில் இறங்கி இப்படி செய்துள்ளார். தங்கள் மனது அறிந்து அவர்கள் தலைவி செயல்பட்டதால் அக்கட்சியின் விசுவாசிகளும், இன்று வெளியே அனுப்பட்டவர்களால் பாதிக்கப்பட்டவர்களும் அவ்வாறு கொண்டாட்டத்தில் இறங்கி உள்ளனர்.

பார்வதி: ஒ...ஹோ.....அது தான் செய்தியோ......அப்ப ரொம்ப நாளா அவர்களுக்குள் ஒரு “கெளரவம்” திரைப்படத்தை போல ஒன்று ஒட்டிருப்பர்கள் என்று கூறுங்கள்...

சிவன்: இதில் இன்னொன்றையும் நான் சொல்லி ஆகா வேண்டும். இந்த பிரிவால் எதிர் அணியினரின் செயல் எப்படி இருக்கும் என்பதையும் நாம் பொறுமையாக கவனிக்க வேண்டும். இதை எதிர் பார்த்துத்தான்  பூலோகத்தில் இருக்கும் அரசியல் நோக்கர்கள் ஆர்வமுடன் இருகிறார்கள்.

பார்வதி: நானும் சென்று பார்த்துவிட்டு வரட்டுமா பிரபோ....

சிவன்: நமக்கேன் அந்த வீண் வம்பு....நமக்கும் அந்த பூலோக அரசியலுக்கும் ரொம்ப தூரம்பா...ஆளை விடு.....

நாராயண நாராயண....

சிவன்: வாருங்கள் நாரதரே.....நீங்கள் என்ன 'கழகம்' ஐயோ...இந்த பூலோக அரசியல் பேசி எனக்கும் 'கழகம்' ஒட்டிகிச்சே.....மன்னிக்கவும் நாரதரே.....நீங்கள் என்ன 'கலகம்'  செய்ய வந்துள்ளீர்...

Saturday 17 December 2011

கலசம் இணைய வானொலி


வணக்கம் நண்பர்களே!

கொஞ்ச நாள் முன்னாடி நான் பொழுது போக்குறதுக்காக சில internetல ஒரு rounds வந்தேன் (இப்போ மட்டும் என்ன உருப்படியா எதாவது பண்றியா அப்படின்னு நீங்க கேக்குறது காதில விழுது...அதெல்லாம் விட்டு தள்ளுங்க பாஸ்...). அப்ப சில இணைய வானொலி வலைத்தளங்கள் (புரியாதவங்களுக்கு இங்கிலிஸ்ல சொல்றேன் Online or Web Radios) என் கண்ணுல பட்டுச்சு. அதுல நான் கேட்டு எனக்கு ரொம்ப புடிச்சது, ரொம்ப informative இருக்க ரேடியோ "கலசம்" அப்படிங்கிற ரேடியோ.

அந்த கலசம் ரேடியோவோட சில specialties கொஞ்சம் இங்க list பண்றேன்.

1) விளம்பரம் கொஞ்சம் கூட கிடையாது இல்ல ஒன்னு/ரெண்டு விளம்பரம் தான் ஒரு நாளைக்கு.

2) பெரும்பாலும் மெலடி, காதல் பாட்டுக்கள் தான். Rough ஆன பாட்டுக்கள் ரொம்ப கம்மி.

3) ஒவ்வொரு பாட்டுக்கு நடுவிலயும் தமிழ் சினிமா ஜோக்ஸ், தமிழ் சினிமா Punch Dialogues, சுகி சிவம் inspirational speeches, தமிழ் மொழிய பத்தின சுவையான விஷயங்கள், தமிழ் நாடு / இந்தியா பத்தின சுவையான விஷயங்கள், தமிழ் சினிமா sentimental dialogues, வரலாற்று பதிவுகள், அண்ணா / காமராஜர் / பெரியார் / திருமுருக கிருபானந்த வாரியார் மேடை பேச்சுகள், Vijay TV "நீயா நானா"ல வந்த முக்கியமான / நகைச்சுவையான தொகுப்புகள், Sun TV "அசத்த போவது யாரு" காமெடி தொகுப்பு....இப்படி எவ்வளவோ இருக்கு.

என்னோட இந்த வலை பதிவுல "கலசம்" ரேடியோ தான வேலை பாக்குற மாதிரி செட் பண்ணிருக்கேன். கேளுங்க. புடிச்சிருந்தா சந்தோஷபடுங்க. பிடிக்கலையா உங்க வலது பக்கம் இருக்க அந்த gadgetல ரேடியோவ switch-off  பண்ணிடுங்க.

ரேடியோ வேலை பார்கலனா உங்க Browser Plug-insஅ கொஞ்சம் check பண்ணிகோங்க. அப்படியும் வேலை செய்யலியா கீழ இருக்க வலைதளத்துல எதாவது ஒன்ன பயன்படுத்தி அந்த ரேடியோவ நீங்க கேட்கலாம்.

www.kalasam.com
www.tamilfms.com

இந்த player embedded link, Internet Explorer 9, Fire Fox 8.0.1,Google Chrome மற்றும் Safari 5.1.2 ஆகிய browserகளில் test செய்த பிறகே இந்த வலைதளத்தில் ஏற்றப்பட்டுள்ளது. அதையும் மீறி ரேடியோ வேலை செய்யல அப்படினா நீங்கள் உங்கள் கணிணி திறனை கொண்டு சரிசெய்து எனக்கு தெரியபடுத்தவும்.

நன்றி.

எனது புதிய முயற்சி.....

எனது இந்த புதிய முயற்சியினை உங்கள் முன் சமர்பிக்கிறேன்......எனது புதிய இணைய வலைப்பதிவு.
இந்த பதிவில் எனக்கு பிடித்தவை, எனது உணர்சிகள் , நான் ரசித்தவை, எனக்கு தெரிந்த எனது கவனத்திற்கு வருகிற சமூக அவலங்கள் ஆகியவற்றை உங்கள் முன் படைக்கவிருகிறேன். உங்கள் பங்களிப்பாக எனது சமூக மற்றும் கலை பார்வை பற்றி உங்கள் விருப்பங்களை தெரிவியுங்கள். எனது கண்ணோட்டத்தில் ஏதேனும் தவறு இருந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள். உங்கள் கோபங்களையும் உணர்ச்சிகளையும் நீங்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி.