Saturday 17 December 2011

கலசம் இணைய வானொலி


வணக்கம் நண்பர்களே!

கொஞ்ச நாள் முன்னாடி நான் பொழுது போக்குறதுக்காக சில internetல ஒரு rounds வந்தேன் (இப்போ மட்டும் என்ன உருப்படியா எதாவது பண்றியா அப்படின்னு நீங்க கேக்குறது காதில விழுது...அதெல்லாம் விட்டு தள்ளுங்க பாஸ்...). அப்ப சில இணைய வானொலி வலைத்தளங்கள் (புரியாதவங்களுக்கு இங்கிலிஸ்ல சொல்றேன் Online or Web Radios) என் கண்ணுல பட்டுச்சு. அதுல நான் கேட்டு எனக்கு ரொம்ப புடிச்சது, ரொம்ப informative இருக்க ரேடியோ "கலசம்" அப்படிங்கிற ரேடியோ.

அந்த கலசம் ரேடியோவோட சில specialties கொஞ்சம் இங்க list பண்றேன்.

1) விளம்பரம் கொஞ்சம் கூட கிடையாது இல்ல ஒன்னு/ரெண்டு விளம்பரம் தான் ஒரு நாளைக்கு.

2) பெரும்பாலும் மெலடி, காதல் பாட்டுக்கள் தான். Rough ஆன பாட்டுக்கள் ரொம்ப கம்மி.

3) ஒவ்வொரு பாட்டுக்கு நடுவிலயும் தமிழ் சினிமா ஜோக்ஸ், தமிழ் சினிமா Punch Dialogues, சுகி சிவம் inspirational speeches, தமிழ் மொழிய பத்தின சுவையான விஷயங்கள், தமிழ் நாடு / இந்தியா பத்தின சுவையான விஷயங்கள், தமிழ் சினிமா sentimental dialogues, வரலாற்று பதிவுகள், அண்ணா / காமராஜர் / பெரியார் / திருமுருக கிருபானந்த வாரியார் மேடை பேச்சுகள், Vijay TV "நீயா நானா"ல வந்த முக்கியமான / நகைச்சுவையான தொகுப்புகள், Sun TV "அசத்த போவது யாரு" காமெடி தொகுப்பு....இப்படி எவ்வளவோ இருக்கு.

என்னோட இந்த வலை பதிவுல "கலசம்" ரேடியோ தான வேலை பாக்குற மாதிரி செட் பண்ணிருக்கேன். கேளுங்க. புடிச்சிருந்தா சந்தோஷபடுங்க. பிடிக்கலையா உங்க வலது பக்கம் இருக்க அந்த gadgetல ரேடியோவ switch-off  பண்ணிடுங்க.

ரேடியோ வேலை பார்கலனா உங்க Browser Plug-insஅ கொஞ்சம் check பண்ணிகோங்க. அப்படியும் வேலை செய்யலியா கீழ இருக்க வலைதளத்துல எதாவது ஒன்ன பயன்படுத்தி அந்த ரேடியோவ நீங்க கேட்கலாம்.

www.kalasam.com
www.tamilfms.com

இந்த player embedded link, Internet Explorer 9, Fire Fox 8.0.1,Google Chrome மற்றும் Safari 5.1.2 ஆகிய browserகளில் test செய்த பிறகே இந்த வலைதளத்தில் ஏற்றப்பட்டுள்ளது. அதையும் மீறி ரேடியோ வேலை செய்யல அப்படினா நீங்கள் உங்கள் கணிணி திறனை கொண்டு சரிசெய்து எனக்கு தெரியபடுத்தவும்.

நன்றி.

2 comments:

  1. தங்களது புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். கலசம் FM அறிமுகத்திற்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  2. நன்றி "நவீன பாரதி" அவர்களே...முதல் வாசகராக எனது வலைப்பதிவில் உங்கள் எண்ணங்களை (Comments) பதிவு செய்ததற்கு. என்றும் உங்கள் நலன் விரும்பும் An Indian's Voice.

    ReplyDelete