
சுஜாதா என்கிற புனை பெயர் கொண்ட அமரர் திரு.ரங்கராஜன் அவர்கள் எழுத்து உலகின் ஜாம்பவானாக திகழ்ந்தார் என்று கூறினால் அது மிகை ஆகாது. எனது ஊரில் பிறந்தவர் என்கிற காரணத்திற்காக நான் இதை தெரிவிக்கிறேன் என்று நீங்கள் நினைத்தாலும் நான் அதற்கு பெருமை கொள்கிறேன்.
அவரது மனைவி திருமதி.சுஜாதா அவர்களை உரிமையாளராக கொண்டு ஒரு அதிகாரபூர்வ இணையத்தளம் (Official Website) உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இணையத்தளம்
இந்த இணையத்தளத்தில், எனக்கு தெரிந்து அவரின் அனைத்து படைப்புகளும் மின்-புத்தகங்களாக (e-books) ஆகா பதிவேற்றம் (upload) செய்துள்ளார்கள். அவை அனைத்தும் 3 முதல் 5 அமெரிக்க டாலர்கள் (3 to 5 USD) விலைக்கு கிடைக்கிறது. அவரின் படைப்புகளால் ஏற்படும் திருப்தி மற்றும் அறிவை கணக்கிடுகையில் இந்த விலை என்னை பொருத்த வரையில் ஒன்றும் இல்லை என்றே கூறுவேன். இதில் உபயோகம் உள்ளது என்று நினைப்பவர்கள், நீங்கள் விரும்பும் புத்தகத்தை e-commerce என்கிற வலை தொடர்பில் (link) சென்று கட்டணம் செலுத்தி பதிவு இறக்கம் (download) செய்துகொள்ளுங்கள்.
எனது இந்த பதிவை அந்த மாமேதைக்கு சமர்ப்பிக்கிறேன்.
குறிப்பு:
இந்த வலைத்தள ஆசிரியர் / உரிமையாளர், எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் மீது கொண்ட அபிமானத்தின் வெளிப்பாடாக இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவிற்கும் / வலைத்தள ஆசிரியர் / உரிமையாளருக்கும் , http://www.writersujatha.com உரிமையாளர் / நிர்வாகிக்கும் (Admin) எந்த சம்பந்தமோ / தொடர்போ இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment