Monday 19 December 2011

நீயும் நானுமா? சசி...நீயும் நானுமா?



மேல்லோகத்தில் பார்வதி சிவனிடம் கேட்கிறாள்:

பார்வதி: பிரபோ, பூலோகத்தில் இன்று என் நிறைய பேர் மொட்டை அடித்து திருவிழா போல கொண்டாடுகிறார்கள்?

சிவன்: அவர்கள் அ.தி.மு.க கட்சியின் உண்மை விசுவாசிகள். எதற்கு அப்படி கொண்டாடுகிறார்கள் என்று கூறுகிறேன் கேள்.......

அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா திடீர் நீக்கம் - போயஸ் தோட்டத்தில் இருந்தும் வெளியேற்றம்

தனது நீண்ட கால தோழி மற்றும் அவர்கள் சொந்தங்களையும் அ.தி.மு.க.விலிருந்து நீக்கியுள்ளார் ஜெ. ரொம்ப காலமாகவே அவர்கள் நட்பு, மக்கள் மட்டும் அல்ல அவர்கள் கட்சி விசுவாசிகளுக்குமே ஒரு புரியாத புதிராக இருந்து வந்துள்ளது. கட்சி மற்றும் ஆட்சியிலும் அவர்களின் ஆதிக்கம் இல்லாத இடமே இல்லை என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு அவர்கள் தான் அ.தி.மு.க என்கிற பிம்பத்தை உருவாக்கியதாக அக்கட்சியின் விசுவாசிகள் நம்பினார்கள். இதனால் எம்.ஜி.அர் அவர்களின் உண்மை விசுவாசிகளுக்கு கட்சியில் இடம் இல்லாமல் போனது. இதனை தொண்டர்கள் எத்தனையோ முறை ஜெ.விடம் சொல்ல நினைத்து முடியாமல் போனது. இன்றைக்கு வெளியேற்றப்பட்டவர்கள் ஒரு Windows Firewall போல செயல்பட்டு அடிமட்டத்தில் இருந்து வரும் தகவல்களை ஜெ.விடம் முறையாக போய் சேராதபடி பார்த்துகொண்டவர்கள். இதனை அரசால புரசலாக தெரிந்து கொண்ட ஜெ. இனியும் சும்மா இருந்தால் நல்லதல்ல என களத்தில் இறங்கி இப்படி செய்துள்ளார். தங்கள் மனது அறிந்து அவர்கள் தலைவி செயல்பட்டதால் அக்கட்சியின் விசுவாசிகளும், இன்று வெளியே அனுப்பட்டவர்களால் பாதிக்கப்பட்டவர்களும் அவ்வாறு கொண்டாட்டத்தில் இறங்கி உள்ளனர்.

பார்வதி: ஒ...ஹோ.....அது தான் செய்தியோ......அப்ப ரொம்ப நாளா அவர்களுக்குள் ஒரு “கெளரவம்” திரைப்படத்தை போல ஒன்று ஒட்டிருப்பர்கள் என்று கூறுங்கள்...

சிவன்: இதில் இன்னொன்றையும் நான் சொல்லி ஆகா வேண்டும். இந்த பிரிவால் எதிர் அணியினரின் செயல் எப்படி இருக்கும் என்பதையும் நாம் பொறுமையாக கவனிக்க வேண்டும். இதை எதிர் பார்த்துத்தான்  பூலோகத்தில் இருக்கும் அரசியல் நோக்கர்கள் ஆர்வமுடன் இருகிறார்கள்.

பார்வதி: நானும் சென்று பார்த்துவிட்டு வரட்டுமா பிரபோ....

சிவன்: நமக்கேன் அந்த வீண் வம்பு....நமக்கும் அந்த பூலோக அரசியலுக்கும் ரொம்ப தூரம்பா...ஆளை விடு.....

நாராயண நாராயண....

சிவன்: வாருங்கள் நாரதரே.....நீங்கள் என்ன 'கழகம்' ஐயோ...இந்த பூலோக அரசியல் பேசி எனக்கும் 'கழகம்' ஒட்டிகிச்சே.....மன்னிக்கவும் நாரதரே.....நீங்கள் என்ன 'கலகம்'  செய்ய வந்துள்ளீர்...

No comments:

Post a Comment